சிவமயம்

ஸ்ரீ அகத்தியர், பிருகு மகரிஷி நாடிஜோதிடம்.

தங்கள் கை பெருவிரல் ரேகையின் மூலம்,ஜாதகத்தைகொண்டும் பழங்காலத்தில் வாழ்ந்த சப்தரிஷிகளான அகத்தியர், போகர்,வஷிஷ்டர்,காக்கபுசண்டர்,கௌசிகர்,பிருகு,சிவவாக்கியர் போன்ற மகரிஷிகளால் எழுதப்பட்ட புராதன ஓலைச்சுவடிகளை தேடி  தாங்களது வாழ்க்கையின் முன்னேற்றம்,கல்வி,தொழில்,வேலை வாய்ப்பு,கலைப்பணி, பொதுப்பணி,திருமணம்,இல்லற வாழ்க்கை,மறுமணம்,குழந்தைகள்பிறப்பு,பிள்ளைகளின் எதிர்காலம் சொத்துக்கள்,  வாகனசுக போகங்கள், அதிர்ஷ்டவாய்ப்புகள், உயர்பதவிகள், ஆலயதரிசனம், ஆன்மீகவழிபாடுகள் மற்றும் பல நன்மைகளும். கடன்,வழக்கு,வியாதி,விரோதி,எதிர்பாராகண்டம்,இழப்புகள்,தோஷங்களால் ஏற்படும் அவதிகளை, பூர்வஜென்ம பாவவினையை ஓலைச்சுவடியின் மூலம் அதற்குறிய நிவர்த்திகளையும்  சித்தர்களின் மூலிகை  பரிகாரங்களும் கூறி தங்களுடைய வாழ்வில் ஒளியேற்ற அழைக்கிறோம்.

காண்டங்களின் விளக்கங்கள்.

பொதுக்காண்டம்:தஙகள் கை பெருவிரல்(ஆண் வலது பெண் இடது) ரேகையைக்கொணடும் ஜாதகத்தைக்கொண்டும் மகரஷிகளால் எழுதப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகளின் மூலம் ஜாதகராகிய உங்களின் ஏட்டை தேடிஎடுத்து வாழ்காலத்தில் நடக்ககூடிய பொதுவான பலன்களையும் பன்னிரெண்டு காண்டங்களுடைய சுருக்கமான பலன்களை கூறுவதற்கு அவசியம் இதை எடுத்தாக வேணடும்.

2வது காண்டம்: வாக்குவன்மை தனம் குடும்பம் கல்வி கண் சுகசௌகரியங்கள் முதலியவற்றை பற்றி கூறுவது.

3வது காண்டம்: இளைய சகோதர சகோதரிகளின் விருத்தி ஆதரவு ஒற்றுமை அவர்களால் ஏற்படக்கூடிய புகழ் வெற்றி அந்தஸ்து யோகம் இவைகளை பற்றி கூறுவது.

4வது காண்டம்: தாயாரின் பாக்கியம் வீடு நிலம் வாகனசுகம் வாழ்க்கையில்ஏற்படும்(அரசியல்) செல்வாக்கு புதையல் மற்றும் மகிழ்ச்சிகரமான பாக்கியங்களை பற்றிக்கூறுவது.

5வது காண்டம்: குழந்தைகளின் பிறப்பு இறப்பு அவர்களால் ஏற்படும் நன்மைகள் குழந்தைகள் இல்லாததற்கு காரணம் பூர்வபுண்ணிய பலன்களை பற்றிக்கூறுவது.

6வது காண்டம்:வாழ்க்கையில் ஏற்படும் வியாதி கடன் வழக்கு விரோதம் எதிரிகளால் தொல்லைகள் சிறைபடுதல் விஷபீடைகள் களவுபோதல் போன்றவற்றை நீக்கும் முறைப்பற்றிக் கூறுவது.

7வது காண்டம்: திருமணக்காலம் எத்திசையில் எப்பேர்பட்ட வரன்கிடைக்கும் அவர்களின் குடும்பவிவரம் அதனால் ஏற்படும் நன்மைகள் திருமணம் காலம் கடந்த காரணம் தோஷநிவர்த்தி முறைகளை பற்றிக்கூறுவது.

8வது காண்டம்: ஆயுள்நிர்ணயம் எத்தனை வயதுவரை உயிர்வாழலாம் இடையில் ஏற்படும் கண்டங்கள் விபத்துக்கள் உயிர்விடும் காலம் எப்படி என்ற விவரம் கூறுவது.

9வது காண்டம்: தகப்பனார் பாக்கியம் செல்வயோகம் குருஉபதேசம் தானதர்மம் ஆலயதரிசனம் முதலியவற்றைப்பற்றி கூறுவது.

10வது காண்டம்: தொழில் வியாபாரம் உத்தியோகம் எந்தவிதமான தொழில் அல்லது வியாபாரம் செய்தால் முன்னேறலாம் என்பதைப்பற்றி கூறுவது.

11வது காண்டம்: லாபம் எந்தெந்த வகையில் கிடைக்கும் 2-வதுதிருமணம் மூத்தசகோதரர்களை பற்றி அறிதல். இது போன்றவைகளால் ஏறபடும் நன்மைகள் பற்றிக்கூறுவது.

12வது காண்டம்: செலவுகள் ஏற்படும்விதம் மோட்சம் அடுத்தபிறவி எடுக்கும் இடம் வாழும்தன்மை வெளிநாடுசெல்வதனால் ஏற்படும் நன்மைகளைப்பற்றி கூறுவது.

தனிக்காண்டங்கள்

சாந்தி காண்டம்: கிரகதோஷங்களும் முற்பிறவியில் எங்குபிறந்தோம் செய்த நன்மை தீமை அதனால் ஏற்பட்டபாவம் பெற்றசாபம் அதனை நீக்குவதற்கூறிய வழிமுறைகளான தானதர்மம் மற்றும் கோயில்வழிபாடுகள் பற்றிக்கூறுவது.
தீட்சை காண்டம்: மந்திரத்தைபற்றிச் சொல்வது எந்த தெய்வத்தின் மந்திரத்தை முறைப்படி ஜெபித்து தாயித்தாக அணிந்துகொண்டால் எதிரிவாட்டம் சூனியம் வியாபாரநஷ்டம் நீங்கி நலமாய் வாழ அறிவது.
ஒளஷத காண்டம்: உடம்பில் ஏற்படும் தீராதவியாதி அதனை நீக்கும் சித்தமருந்து சாப்பிடும்முறைகள் பத்தியம் மூலிகை கிடைக்குமிடம் இவைகளை அறிவது.
ஞான காணடம்: வாழ்வில் ஞானமார்க்கம் ஏற்படுமா? ஏப்போது? யாரால்? எந்தவயதில் எனபதைப் பற்றி அறிவது.
மற்றும் பிருகுநாடி கௌசிகநாடி மகாசிவ வாக்கியம் ஜெனனகாண்டம் தசாபுக்திகாண்டம் பிரச்சனை காண்டம் நேரில் விளக்கப்கடும்.